சென்னை மெட்ரோ ரயிலுக்கு whatsapp மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மெட்ரோ நிர்வாகம் சார்பில் கொடுக்கப்படும் மொபைல் எண்ணுக்கு Hi என்று மெசேஜ் அனுப்பினால் அதன் மூலம் கேட்கப்படும் தகவல்களை பதிவு செய்தால் டிக்கெட் தயாராகிவிடும். கூகுள் பே அல்லது போன் பே போன்ற யுபிஐ செயலிகளை வைத்து பணம் செலுத்தினால் க்யூ ஆர் கோடு வழங்கப்பட்டு விடும். அதனை வைத்து மெட்ரோவில் பயணம் செய்து கொள்ளலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மெட்ரோ பயணிகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories