Categories
உலக செய்திகள்

கொரோனா அச்சம்… கைதிகள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும்!

இலங்கையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சிறைக்கைதிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் 137 நாடுகளில் பரவி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கி இருக்கிறது. மேலும் 1 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவின் பிடியில் சிக்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். சர்வதேச நாடுகள் அனைத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகின்றன. மேலும்  நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் கொரோனா தடுப்பு நடவடிகைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஈரான் நாட்டில் 70,000 சிறைக்கைதிகள் தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சிறைக்கைதிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று அனைத்து சிறை கண்காணிப்பாளர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் இந்த தீர்மானம் தற்போது எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிறைச்சாலைத் துறையினரின் சீருடைக்கு பயன்படுத்தும் துணி வகைகளை அடிப்படையாகக் கொண்டே  இந்த முகமூடிகளை தயாரிக்க வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக  ஒவ்வொரு சிறைக்கும் தலா 100 மீட்டர் துணி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சிறையறைகளுக்குள் நுழைவதற்கு முன்பாக கைதிகள் கைகளை கழுவவும் வசதிகள் செய்யுமாறு அனைத்துசிறை கண்காணிப்பாளர்களுக்கும் சிறைத்துறை அறிவுறுத்தியுள்ளது  குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |