தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் டாப்சி. இவர் தற்போது பாலிவுட்டில் அதிக படங்களில் நடித்து வருகிறார். அதன் பிறகு நடிகை டாப்சி அடிக்கடி பொதுவெளியில் வெளிப்படையாக பேசுவதால் சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார். இவரை திமிர் பிடித்தவள் என்று பலரும் விமர்சிக்க தொடர்ந்து வலைதளத்தில் டாப்சி பற்றிய விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கிறது. இது தொடர்பாக நடிகை டாப்சி தற்போது பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, சில நடிகர், நடிகைகள் கேமராவுக்கு முன் நடிப்பது போன்று வெளியிலும் நடிப்பார்கள். எனக்கு அதே போன்று நடிக்க தெரியாது. நான் பாராட்டுக்காக அலைபவள் இல்லை.
நான் எப்போதும் நேர்மையாக தான் இருப்பேன். என்னை நிறைய பேர் விமர்சிப்பது வேதனையாக இருக்கிறது. இதனால் நான் வலைதளத்தை விட்டு விலகி இருக்க தற்போது முடிவு செய்துள்ளேன். என்னைப் பற்றி வரும் தகவல்களை இனி யாரும் மலைதளத்தில் தேடக்கூடாது என்று நினைக்கிறேன். நான் எனக்கு பிடித்த மாதிரி சமூகத்தில் இருக்க விரும்புகிறேன். ஆனால் சில பிரபலங்கள் வெளியிலும் நல்ல பெயர் வாங்குவதற்காக நடிக்கிறார்கள். எல்லோருக்கும் என்னை பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு நடிகை என்ற முறையில் என்னை பாராட்டினால் போதும் என்று கூறியுள்ளார். மேலும் நடிகை டாப்சி வலைதளங்களில் இருந்து விலகப் போகிறேன் என்று கூறியது அவருடைய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.