Categories
சினிமா தமிழ் சினிமா

ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலிருந்து விலகிய உதயநிதி?…. வெளியான புதிய அதிரடி அறிவிப்பு….!?!

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான குருவி என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். இவர் ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் படங்களை தயாரிப்பது மட்டுமின்றி விநியோகமும் செய்து வருகிறார். ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான உதயநிதி ஸ்டாலினின் நடிப்பில் கடைசியாக கலகத் தலைவன் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு திமுக கட்சியின் எம்எல்ஏவாக இருந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது அமைச்சராக பொறுப்பேற்றுள்ளதால் மாமன்னன் படத்திற்கு பிறகு இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று உதயநிதி கூறியதால் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை யார் ஏற்பார் என்ற கேள்வி பலரது மத்தியிலும் நிலவியது. இந்நிலையில் தற்போது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதி ஏற்க போவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த தகவல் உறுதியாகவில்லை. மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |