உலகமே வியந்து பார்க்கும் ஐபிஎல் தொடரின் 15 சீசன்கள் இதுவரை முடிவடைந்துள்ள நிலையில் 16 வது சீசன் வருகின்ற ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இது தொடங்குவதற்கு முன்பாக வருகின்ற டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் மினி ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலம் இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்க உள்ள நிலையில் ஐபிஎல் ஏலத்தில் 405 கிரிக்கெட் வீரர்கள்பங்கேற்கின்றனர். இவர்களில் கேன் வில்லியம்சன், பென் ஸ்டோக்ஸ் ஆகிய பெரிய வீரர்கள் இந்த ஏலத்தில் இடம்பெற்றுள்ள நிலையில் எந்தெந்த வீரர்கள் எந்தெந்த அடிப்படை விலைப்பிரிவில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த போட்டிகளில் பங்கேற்க உள்ள வீரர்களின் அடிப்படை விலை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி
- மயங்க் அகர்வால் – 1 கோடி ரூபாய்
- அஜிங்க்யா ரகானே – 1.5 கோடி ரூபாய்
- ரைலி ரோசாவ் – 2 கோடி ரூபாய்
- கனே வில்லியம்சன் – 2 கோடி ரூபாய்
- சாம் கரன் – 2 கோடி ரூபாய்
- கேமரூன் கிரீன் – 2 கோடி ரூபாய்
- ஷகிப் அல் ஹசன் – 1.5 கோடி ரூபாய்
- ஜேசன் ஹோல்டர் – 2 கோடி ரூபாய்
- பென் ஸ்டோக்ஸ் – 2 கோடி ரூபாய்
- டாம் பான்டன் – 2 கோடி ரூபாய்
- ஹென்ரிக் கிளாசென் – 1 கோடி ரூபாய்
- நிகோலஸ் பூரன் – 2 கோடி ரூபாய்
- பில் சால்ட் – 2 கோடி ரூபாய்
- கிறிஸ் ஜோர்டன் – 2 கோடி ரூபாய்
- ஆடம் மில்னே – 2 கோடி ரூபாய்
- அடில் ரஷீத் – 2 கோடி ரூபாய்
- ட்ராவிஸ் ஹெட் – 2 கோடி ரூபாய்
- டேவிட் மலான் – 1.5 கோடி ரூபாய்
- மணீஷ் பாண்டே – 1 கோடி ரூபாய்
- ஜிம்மி நீஷம் – 2 கோடி ரூபாய்
- பிரண்டன் கிங் – 2 கோடி ரூபாய்
இதில் அதிகபட்சமாக 2 கோடி ரூபாயும், குறைந்தபட்சமாக ரூபாய் 20 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில வீரர்களுக்கு 1.50 கோடி ரூபாயும், சில வீரர்களுக்கு 1 கோடி ரூபாயும் அடிப்படை விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.