சென்னை மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் அன்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் உள்ள முதியவர்களுக்கு இலவசமாக பயணம் செய்யும் வகையில் பயண டோக்கன்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஒரு மாதத்துக்கு 10 என 6 மாதங்களுக்கு வழங்கப்படும். இது வருகின்ற புதன்கிழமை முதல் அடுத்த மாதம் 31-ஆம் தேதி வரை தினமும் காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை அனைத்து பணிமனைகளிலும் வழங்கப்படும்.
மேலும் இந்த டோக்கன்களை புதுப்பிக்க வருபவர்கள் தங்களது முந்தைய கட்டணமில்லா பயண அடையாள அட்டை, புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். மேலும் புதிதாக பெற விரும்புபவர்கள் இருப்பிடச் சான்று நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் , ஓட்டுனர் உரிமம் நகல், கல்வி சான்றிதழ் நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல் , 2 புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வந்து பெற்றுக் கொள்ளலாம் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.