ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்த வருடம் 16-வது சீசன் நடைபெற இருக்கிறது. இந்த 16-வது சீசனை முன்னிட்டு கொச்சியில் ஐபிஎல் மினி ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்தில் சுமார் 991 வீரர்கள் விண்ணப்பித்த நிலையில், 405 பேர் இறுதி செய்யப்பட்டு 405 வீரர்களும் ஏலத்தில் விடப்பட்டுள்ளனர். கடந்த போட்டியில் க்றிஷ் மோரீஸ் சென்ற வீரர்தான் ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு விலை போனார். இவருக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சுமார் 16.25 கோடி ரூபாய் கொடுத்தது. இந்நிலையில் 16-வது சீசனுக்கான ஏலத்தில் எந்த வீரர் அதிக விலைக்கு விலை போவார் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
அதன்படி இடது கை வேக பந்து வீச்சாளரான ஷாம் கரனை வாங்க சுமார் 18 கோடி வரை அணிகள் செலவு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பை போட்டியில் ஷாம் கரன் தொடர் நாயகன் விருதையும், இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். கடந்த வருடம் சிஎஸ்கே கோப்பையை வெல்ல முக்கிய காரணமாகவும் திகழ்ந்தார். இதனையடுத்து பென் ஸ்டோக்ஸ் கஷ்டமான ஆட்டங்களில் கூட சிறப்பாக விளையாடக் கூடியவர். இவர் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங், கேப்டன் மற்றும் ஆலோசகர் என அனைத்து பிரிவுகளிலும் சிறந்து விளங்குவார் என்பதால் இவரையும் பல கோடிகள் கொடுத்து ஏலத்தில் வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பிறகு நிக்கோலஸ் பூரன் சமீபத்தில் நடைபெற்ற டி20 போட்டியில் தன்னுடைய அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இவரை கடந்த ஆண்டு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10.75 கோடிக்கு வாங்கி இருந்தால் இந்த சீசனிலும் பூரனை அதிக விலைக்கு ஏலத்தில் வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து அணி வீரரான ஹேரி ப்ரூக் சமீபத்தில் நடைபெற்ற டி20 போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான 7 போட்டிகளில் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார். இதனால் இவரை சுமார் 10 கோடி ரூபாய் வரை செலவு செய்து ஏலத்தில் எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த 2020-ம் ஆண்டுக்குப் பிறகு ஐபிஎல் சிறந்த ஸ்டிரைக் ரைட் வைத்திருக்கும் டாப் 3 பேட்டரிகளில் ஒருவராக மயங்க் அகர்வால் இருக்கிறார். இவரை கொல்கத்தா, சிஎஸ்கே, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் போன்ற அணிகள் சிறந்த ஓப்பனருக்காக ஏலத்தில் போட்டி போட்டு வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆஸ்திரேலிய அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஆல் ரவுண்டராக இருக்கும் கேமரூன் க்ரீன் சமீபத்தில் நடைபெற்ற டி20 போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இவருடைய தேவை பல அணிகளுக்கும் இருப்பதால் பல கோடிக்கு ஏலத்தில் விற்பனையாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.