அத்திப்பழம் நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.
தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் அழகும், இளமையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும். 2 அத்திப்பழத்தை நாள்தோறும் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். மலச்சிக்கலை முற்றிலும் தவிர்க்க இரவில் 5 அத்திப் பழங்களை சாப்பிட்டால் உடனடியாக குணமாகும்.
போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தை அத்திப்பழம் குணமாக்கும். மேலும் அத்திப் பழத்தை சாப்பிடுவதால் வாய்நாற்றம் முழுமையாக நீங்கும். இத்தனை நற்பயன்களை அத்திப்பழத்தை அவ்வப்போது சாப்பிட்டு நாமும் பயன் பெறுவோம்.