ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்த வருடம் 16-வது சீசன் நடைபெற இருக்கிறது. இந்த 16-வது சீசனை முன்னிட்டு கொச்சியில் ஐபிஎல் மினி ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்தில் சுமார் 991 வீரர்கள் விண்ணப்பித்த நிலையில், 405 பேர் இறுதி செய்யப்பட்டு 405 வீரர்களும் ஏலத்தில் விடப்பட்டுள்ளனர். இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 2023-ம் ஆண்டு நடைபெறும் போட்டியில், தங்கள் அணிக்கு வலுவான வீரர்களை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அணியில் தற்போது 7 இடங்கள் காலியாக இருக்கும் நிலையில், ஐபிஎல் மினி ஏலத்தில் 3 வீரர்களை குறி வைத்து ஏலத்தில் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இடது கை வேக பந்து வீச்சாளரான ஷாம் கரனை வாங்க சுமார் 18 கோடி வரை செலவு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பை போட்டியில் ஷாம் கரன் தொடர் நாயகன் விருதையும், இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். கடந்த வருடம் சிஎஸ்கே கோப்பையை வெல்ல முக்கிய காரணமாகவும் திகழ்ந்தார்.
கடந்த 2020-ம் ஆண்டுக்குப் பிறகு ஐபிஎல் சிறந்த ஸ்டிரைக் ரைட் வைத்திருக்கும் டாப் 3 பேட்டரிகளில் ஒருவராக மயங்க் அகர்வால் இருக்கிறார். இவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி உட்பட கொல்கத்தா, சிஎஸ்கே, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் போன்ற அணிகளும் சிறந்த ஓப்பனருக்காக ஏலத்தில் போட்டி போட்டு வாங்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் சிறந்த ஆல் ரவுண்டராக இருக்கும் ஜேசன் ஹோல்டர் லீக் ஆட்டங்கள் மற்றும் குறுகிய ஆட்டங்களில் மிகவும் சிறப்பாக செயல்பட கூடியவர். இவர் கடந்த சீசனில் எல்எஸ்ஜிக்காக 12 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதோடு பேட்டிங்கிலும் சிறப்பான முறையில் விளையாடக் கூடியவர் என்பதால் இவரையும் ஏலத்தில் குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.