Categories
இந்திய சினிமா தேசிய செய்திகள்

கொரொனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு… வீடியோவாக வெளியிட்ட நடிகர் அமிதாப் பச்சன்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கொரொனா வைரஸ் குறித்த தனது கருத்துக்களை கவிதை வரிகளில் பகிர்ந்து கொள்ளும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 85ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இந்த நிலையில் சினிமா பிரபலங்களும் விழிப்புணவு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துகொள்வது குறித்து நடிகர் அமிதாப் பச்சன் விழிப்புணர்வு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் இருப்பதை படித்து வீடியோவாக அவரது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், கைகளை கழுவாமல் மற்றவர்களை தொடாதீர்கள் என ஆரம்பிக்கிறார். மக்கள் முன்னெச்சரிக்கையோடு இருக்க கவிதையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் நெல்லிக்காய் போன்ற விட்டமின் சி நிறைந்த பானங்களை உட்கொள்ளுங்கள் என்றும், மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாப்பாக வைத்திருக்கவும், தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுமாறு குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து கொரொனா தொற்று கவலையளிக்கிறது, தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள் என்று கூறி விரைவு செய்கிறார்.

Categories

Tech |