Categories
தேசிய செய்திகள்

பிஎம் கிசான் திட்டம்: விவசாயிகளே உங்களுக்கு 12-வது தவணை பணம் வரலையா?…. அப்போ உடனே இப்படி பண்ணுங்க….!!!!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் திட்டம் சென்ற 2019 ஆம் வருடம் பிரதமர் நரேந்திர மோடியால் துவங்கப்பட்டது ஆகும். இத்திட்டத்தின் வாயிலாக நாடு முழுவதும் உள்ள விவசாய குடும்பங்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் வருடத்திற்கு ரூபாய்.6000 என 3 மாத தவணையாக தலா ரூபாய்.2000 விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இதன் வாயிலாக லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் 2,43,03,867 விவசாயிகளுக்கு 12-வது தவணைப்பணம் வரவில்லை. இதனால் கணக்கில் பணம் வருமா இல்லையா என்பதை அறிந்துகொள்ள  விவசாயிகள், கட்டணமில்லா எண்ணை அழைத்து தகவல்களை தெரிந்துக்கொள்ளலாம்.

பிஎம் கிசான் குறித்த ஏதேனும் பிரச்சனைகளுக்கு விவசாயிகள் கட்டணம் இல்லா எண்கள் – 1800 180 1551 (அ) 155261 என்ற எண்ணை அழைக்கலாம் என வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. விவசாயிகளுக்கான 12வது தவணையை பிரதமர் மோடி கடந்த அக்..17 ஆம் தேதி அன்று வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக 11வது தவணையாக 11,27,60,560 விவசாயிகளின் கணக்குகளுக்கு ரூபாய்.2000 மாற்றப்பட்டது.

 

Categories

Tech |