கத்தாரில் நேற்று இரவு நடைபெற்ற கால்பந்து உலக கோப்பையை அர்ஜென்டினா அணி வென்றுள்ளது. இறுதிச்சுற்றில் பிரான்சை 4-2 என பெனால்டியில் தோற்கடித்து சாம்பியன் ஆகி உள்ளது. நீண்ட நேரத்திற்கு பின் இரண்டு அணிகளும் 3-3 என சமநிலையில் இருந்தது. அதன் பின் பெனால்டி பகுதியில் 4-2 என அர்ஜென்டினா வென்று கால்பந்து உலக கோப்பையை கைப்பற்றியுள்ளது. அர்ஜென்டினா அணி 1978,, 1986- ஆம் வருடத்திற்கு பின் தற்போது மூன்றாவது உலக கோப்பையை வென்றுள்ளது.
மேலும் இறுதி சுற்றில் காற்று கோல்களை அடித்த இரண்டாவது வீரர் என்னும் பெருமையை எம்பாப்பே அடைந்துள்ளார். இதனையடுத்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மைதானத்தில் எம்பாப்பேவுக்கு ஆறுதல் கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி ட்வீட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,” கடந்த 25 வருடங்களில் இல்லாத அளவிற்கு நேற்றைய போட்டியின் போது பிஃபா உலகக்கோப்பை குறித்து அதிகம் பேர் தேடி உள்ளனர். நேற்று கூகுள் ட்ராபிக் சாதனை படைத்துள்ளது. உலகத்தில் உள்ள அனைவரும் ஒன்றைப் பற்றி தேடுவது போல இருந்தது” என பதிவிட்டுள்ளார்.