சாதி மறுப்பு திருமணம் செய்த இளமதி 4 நாட்களாக கடத்தப்பட்ட நிலையில் தற்போது காவல்நிலையத்தில் ஆஜராகியுள்ளார்.
கடந்த 9ம் தேதி சேலம் மாவட்டம் கொளத்தூரில் இளமதி – செல்வன் என்ற காதல் ஜோடி சுயமரியாதை திருமணம் செய்துகொண்டது.இதனால் ஆத்திரமடைந்த ஜாதி வெறிக் கும்பல் திருமணம் செய்து நடத்தி வைத்த திராவிடர் விடுதலை கழகத்தின் நிர்வாகியும் , திருமணம் செய்துகொண்ட செல்வனையும் கடுமையாக தாக்கி இளமதி கடத்திச் சென்றனர்.இதுகுறித்து போலீசார் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியநிலையில் 5 நாட்களாகியும் இளமதி எங்கே இருக்கிறார் ? என்று இன்னும் கண்டுபிடிக்காத ஒரு அவலம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாராளுமன்றத்தில் தர்மபுரி திமுக மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் குரல் எழுப்பினார். இதையடுத்து #இளமதி_எங்கே என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியது. இந்நிலையில் மேட்டூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கறிஞ்சர் சரவணன் என்பவருடன் இளமதி ஆஜராகியுள்ளார்.