Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலினுக்கு கொடுக்க முடியாது… மகனுக்கு கொத்துட்டேன்னு கெட்ட பெயர் வரும்… பின்வாங்கி மறுத்த கலைஞர் ..!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக  முதல்வர் மு.க. ஸ்டாலின், இளைஞர் அணியின் செயலாளராக நான் பொறுப்பேற்று பணியாற்றிக் கொண்டிருந்தப்போ…  தலைமை கழகமாக செயல்பட்டுக் கொண்டு இருந்த  அன்பகத்தில் இருந்து காலி செஞ்சி அறிவாலயத்திற்கு வருவாங்க. அப்போ அன்பகத்தை எப்படி பயன்படுத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்தபோ…  தொழிலாளி அணி கேக்குது,  மாணவர் அணி கேட்டுகிட்டு இருக்காங்க… இப்படி பல அணிகள் கேட்டுகிட்டு இருக்கிறப்போ….

இளைஞரணி சார்பில் நானும் போய் கேட்டேன். கலைஞர் முடிவே முடியாது..  பிள்ளைக்கு கொடுத்திட்டாங்க என்ற கெட்ட பேரு வரும். என்னால கொடுக்க முடியாது என சொல்லிட்டாரு. அப்போ  பேராசிரியர் ஒரு யோசனை சொன்னார். இந்த கட்சிக்கு 10 லட்ச ரூபாய் நிதி எவன் கொடுக்குறானோ, அவனிடத்தில் குடுப்பேன்னு பட்டுன்னு சொன்னாரு.

ஆறு மாசம் டைம் கொடுத்தாங்க. அஞ்சு மாசத்துல.. 10 லட்சம் இல்ல,  11 லட்சத்தை திரட்டிட்டு கொண்டுபோய் கொடுத்தேன். ஆக போட்டி வச்சு, அந்த போட்டியின் மூலமாக இந்த இளைஞர் அணி அமைப்புக்கு அந்த கட்டிடத்தை பெற்று தந்தவரும் பெரியப்பா பேராசிரியர் அவர்கள் தான். கலைஞருடைய ஆற்றல்,  ஸ்டாலினுடைய செயலில் தெரிகிறது என்று 40 ஆண்டுகளுக்கு முன்பே என்னை பாராட்டியவர் என்னுடைய பேராசிரியர் அவர்கள் தான் என பெருமை கொண்டார்.

Categories

Tech |