தமிழ்நாட்டில் முதல்முறையாக புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புலம்பெயர் தமிழர் நல வாரியத்தின் தலைவராக கார்த்திகேய சிவசேனாபதி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்துள்ளார். அதன் பிறகு புலம்பெயர் தமிழர் நல வாரிய அமைப்பில் மும்பை, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், லண்டன் மற்றும் மொரிசியஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் திமுக தேர்தல் வாக்குறுதியாக புலம்பெயர் தமிழர் நலவாரியம் அமைக்கப்படும் என்று கூறியிருந்த நிலையில் தற்போது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்று விதமாக புலம்பெயர் தமிழர் நல வாரியத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்