பதான் திரைப்படம் குறித்து ஷாருக்கானிடம் பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் தற்போது இணைந்து நடித்த திரைப்படம் பதான். இவர்கள் காம்போவில் ஏற்கனவே வெளியான திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் மீண்டும் இவர்களின் காம்போ இணைந்துள்ளது. இவர்கள் நடித்துள்ள பதான் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. பாடலில் தீபிகா படுகோன் அணிந்திருக்கும் நீச்சல் உடையின் நிறமும் பாடலுக்கு அவர்கள் வைத்துள்ள பேஷ்ரம் ரங் என்ற வார்த்தையும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது.
இந்த நிலையில் இது குறித்து மத்திய பிரதேச சட்டப்பேரவை தலைவர் கிரிஷ் கௌதம் தெரிவித்துள்ளதாவது, சாருக்கான் தனது மகளுடன் இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும். திரையரங்க புகைப்படத்தை பதிவிட்டு தனது மகளுடன் படம் பார்த்தாக ஷாருக்கான் உலகிற்கு கூற வேண்டும். இது கட்டாயம் ஏற்க தக்கது அல்ல. எதை நினைத்தாலும் படமாக எடுப்பீர்களா.? எனில் வெளிப்படையாக நான் ஒன்றை கேட்கின்றேன். முகமது நபிகள் இதுபோல படம் எடுத்து கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வெளியிடுவீர்களா? அப்படி வெளியிட்டால் உலகம் முழுக்க ரத்த வெள்ளம் தான் பாயும் என தெரிவித்துள்ளார்.