தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தல அஜித் தற்போது துணிவு என்ற திரைப் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதன் பிறகு துணிவு படத்தின் சில்லா சில்லா பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 2-ம் பாடலான காசேதான் கடவுளடா பாடலும் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில், தயாரிப்பாளர் கே. ராஜன் ஒரு பட விழாவில் அஜித் பற்றி சொன்னது தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
அவர் பேசியதாவது, நடிகர் அஜித்தின் விவேகம், நேர்கொண்ட பார்வை, வலிமை என 3 படங்கள் தொடர் தோல்வியை சந்தித்துள்ளது. இப்படி தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வரும் நடிகர் அஜித் 100 கோடிக்கும் மேல்சம்பளம் வாங்குவது நியாயமா? ஒரு நடிகர் தோல்வி படங்களை கொடுத்தால் தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் நடிகர் அஜித் மனசாட்சியே இல்லாமல் 25 கோடி ரூபாய் வரை சம்பளத்தை உயர்த்தியுள்ளார். இது கொஞ்சம் கூட நியாயமே இல்லை என்று கூறியுள்ளார். மேலும் கே. ராஜனின் பேச்சுக்கு அஜித் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.