Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி : பத்ம விருது விழா ஒத்திவைப்பு …!!

கொரோனா வைரஸ் பராவிவருவதையடுத்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளபடுகின்றது.

சீனாவை மிரட்டி வந்த கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வாயுக்காமல் வெகுவாக பரவி வருகின்றது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 85ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

Image result for பத்ம விருது விழா

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் தற்காத்து கொள்ளும் வகையில் மத்திய அரசு பேரிடராக அறிவித்து அனைத்து மாநில தலைமை செயலாளருக்கும் சுற்றறிக்கை என்பது அனுப்பப்பட்டுள்ளது. அதே போல தேசியளவில் நடைபெற இருந்த பல்வேறு நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்படுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி மாளிகையில் வருகின்ற ஏப்.3 ஆம் தேதி நடைபெற இருந்த பத்ம விருதுகள் விழா தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |