Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! கோபத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும்..! அனுசரணை தேவை..!!

மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று விரயங்கள் ஏற்படாமலிருக்க விழிப்புடன் செயல்பட வேண்டியது இருக்கும்.

செய்யும் செயலை நிதானமாக செய்யுங்கள். சேமிப்பை மேற்கொள்ளுங்கள். அலைச்சல் அதிகமாக இருக்கும். பிள்ளைகளிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். இடமாற்ற சிந்தனை மேலோங்கும். கற்பனைத் திறன் அதிகரிக்கும். தேவையில்லாத கற்பனைக்கு இடங்கொடுக்க வேண்டாம். மனதை ஒருநிலை படுத்துங்கள். வாடிக்கையாளரிடம் அனுசரித்து செல்லுங்கள். நிதானத்தை மேற்கொண்டால் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு செய்யும் காரியங்களில் நல்லப்பலன் கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். அன்பை வெளிப்படுத்துங்கள், கோவத்தை தவிர்க்கப்பாருங்கள்.

உறவினர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். மனதை ஒருநிலைப்படுத்தி, அமைதியுடன் காரியத்தை மேற்கொண்டால் முன்னேற்றத்தை எளிதில் அடையலாம். காதலில் உள்ளவர்கள் பொறுமை காக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் இன்றையநாள் நல்ல நாளாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 8.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |