தனுசு ராசி அன்பர்களே..!
இன்று உள்ளத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
உடல் ஆரோக்கியம் சிறிது பாதிக்கப்படக்கூடும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. பயணங்களால் வீண் செலவுகள் உண்டாகும். செலவினை கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். உடல் சோர்வு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்லுங்கள்.
யாரிடமும் கோபமாக பேசவேண்டாம். அனைவரிடமும் விட்டுக் கொடுத்து சென்றால் நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும். கணவன் மனைவிக்கிடையே அன்பு வெளிப்படும். குடும்பத்திலும் கலகலப்பான சூழ்நிலை நிலவும். அனைவரிடமும் ஒற்றுமையைக் காண்பீர்கள். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளமஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளமஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றையநாள் சிறப்பான நாளாக அமையும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளமஞ்சள் நிறம்.