தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் மக்களுக்கு ஊட்டச்சத்தை அளிக்கும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. தற்போது ரேஷன் கடைகளில் பட்டை தீட்டிய அரிசி விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு செரி ஊட்டப்பட்ட அரிசி வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி தமிழக முதலமைச்சர் உத்தரவின் பெயரில் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியுடன் வருகின்ற 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் செறிவூட்டப்பட்ட அரிசி கலந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரும்பு சத்து மற்றும் போலிக் அமிலம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களை இந்த அரிசி கொண்டுள்ளது. இனி 100 கிலோ அரிசியில் ஒரு கிலோ இந்த வகை அரிசி சேர்க்கப்படும் என உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.