Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

லீவ் லீவ் தான்…. மாற்றமில்லை…. மாணவர்களே கொண்டாடுங்க…. முதல்வர் உத்தரவு …!!

தமிழகத்தில் உள்ள ப்ரீகேஜி , எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு விடுமுறை உண்டு என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரசால் இந்தியாவைப் பொருத்த வரைக்கும் 80க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு  உறுதியாகி 2 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் தொடக்க வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா ? என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று இரவு பள்ளிக்கல்வித் துறை ஆணையர் விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

அதில் அனைத்து மாவட்டங்களில் இருக்கக்கூடிய தொடக்க வகுப்புகளான ப்ரீகேஜி , எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு மார்ச் 16 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை விடுமுறை  என அறிவிக்கப்பட்டிருந்தது.அதோடு கேரள எல்லையை ஒட்டி இருக்கக் கூடிய கன்னியாகுமரி , நெல்லை, தென்காசி ,தேனி ,கோவை ,திருப்பூர் ,நீலகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிகளில் உள்ள ப்ரிகேஜி , எல்கேஜி , யுகேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இன்று காலை மீண்டும் ஒரு சுற்றைக்கை பள்ளிக்கல்வி ஆணையர் தரப்பில் வெளியாகியது. அதில், விடுமுறை குறித்து மறு அறிவிப்பு வரும் வரை  விடுமுறை குறித்த தகவலை யாரும் தெரிவிக்க வேண்டாம் என்று அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

 

 

மேலும் தமிழக அரசின் சுகாதாரத்துறையுடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டி இருப்பதனால் இந்த அறிவிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வரிடம் இதுகுறித்து கேட்ட போது திட்டமிட்டபடி விடுமுறை உண்டு என்று உறுதிப்படுத்தினார். இதனால் மாணவர்களும் , பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |