மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள் எள்ளுருண்டை சாப்பிடுவதால் அதில் இருந்து விடுபடலாம் அது எப்படி என்பதை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
உலகில் மது, சிகரெட் உள்ளிட்ட தீய பழக்கங்களிலிருந்து விடுபட நினைப்பதுண்டு. ஆனாலும் ஏற்கனவே இத்தனை காலம் பழகிவிட்டோம். அதற்கான பாதிப்புக்கள் உள்ளேஇருக்கும் அதனை குணப்படுத்தாமல் பழக்கத்தை மட்டும் விடுவதா? என்ற யோசனை பலரிடம் இருக்கிறது.
அவர்களுக்காக சிறந்த மருந்து ஒன்று உள்ளது. அது என்னவென்றால், எள்ளுருண்டை. இந்த எள்ளுருண்டையை நாள்தோறும் எப்போதெல்லாம் மது, சிகரெட் உள்ளிட்டவற்றை அருந்த வேண்டும் என்று தோன்றுகிறதோ ? அப்போதெல்லாம் இந்த எள்ளுருண்டை சாப்பிட்டுவந்தால் தீயபழக்கத்தை விடுவதோடு மட்டுமல்லாமல்,
உடலில் உள்ள நச்சுக்கள் பெரும்பான்மை நீங்கும். மேலும் பால் ஒவ்வாமை உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுபவர்கள் நாள்தோறும் எள்உருண்டையை சாப்பிட்டால் மிக நல்லது. ஏனெனில் ஒரு எள்ளுருண்டை ஒரு கிளாஸ் பால் கால்சியம் சத்து நிறைந்திருக்கும்.