செங்கல்பட்டு அருகே தட்டுப்பாடின்றி தண்ணீர் வழங்க கோரி சாலை முன்பு பொதுமக்கள் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் பகுதியை அடுத்த பெரிய வெளிக்காடு கிராமத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மிகப்பெரிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் குடிநீர் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக இந்த தொட்டிகளில் இருந்து மக்களுக்கு சரியாக நீர் விநியோகிக்கப்படுவது இல்லை. இதனால் சிறியவர்கள், பெரியவர்கள் பெண்கள், குழந்தைகள் என பலர் பாதிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஊர்மக்கள் அப்பகுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இன்று காலை திடீரென காலிக்குடங்களுடன் கல்பாக்கம் செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின் இதுகுறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள்,
உடனே பேச்சுவார்த்தை நடத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் குழாய் ஆப்பரேட்டர் உரிய நேரத்தில் பணிக்கு வரவில்லை என்றும், இதனால் தண்ணீர் திறக்க தாமதம் ஏற்பட்டு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
எனவே அவரை மாற்றி தண்ணீர் உரிய நேரத்தில் திறக்க வைத்து தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் கிராமத்தை பாதுகாக்குமாறு மக்கள் கோரிக்கை வைக்கவே, அவர்கள் உரிய முறையில் விசாரணைக்குப் பின் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்க, பின் ஊர் மக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.