Categories
மாநில செய்திகள்

மீனவர்களே…! இந்த தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம்…. வானிலை மையம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையானது நவம்பர் மாதம் 24ஆம் தேதி முதல் தொடங்கியது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. இதனைத் தொடர்ந்து மாண்டஸ் புயலின் காரணமாக மழை பெய்த நிலையில் கொஞ்ச நாட்களாகவே மழை இல்லாமல் கடும் பனிப்பொழிவும், குளிரும் வாட்டி வதைத்து வந்தது . இந்த நிலையில்தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில், காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது.இதனால் இரண்டு நாட்களில், இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரும்.

இதனால், இது, அடுத்த குமரிக் கடல், தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, இலங்கை கடலோரம் மற்றும் அதையொட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு, மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசும். எனவே, மீனவர்கள் வரும், 22ம் தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |