Categories
அரசியல் மாநில செய்திகள்

வழக்குகள் போட்டாலும்.. பிரச்சனைகளில் சிக்க வைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.. Vijayabaskar அதிரடி பேச்சு

அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், நான் என்ன சொல்கிறேன். எனக்கு ஆயிரம் கஷ்டத்தை கொடுக்கிறீர்கள்,  சோதனை பண்ணுறீங்க, வழக்கு போடுறீங்க,  வம்பு பண்ணுறீங்க, விஜயபாஸ்கர் நடக்கவே கூடாது, முடக்கி கதையை முடிச்சிறனும் என முடிவு நீங்க பண்ணிட்டீங்க. அது நடக்கவே நடக்காது.

ஆனால் நம்முடைய தொகுதியைச் சார்ந்த ஏழை மக்களில் கண்களில் வரக்கூடிய ஒரு சொட்டு  கண்ணீர் இந்த ஆட்சியை கவிழ்த்துவிடும் என்பதை நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும். ஆட்சியில் இருப்பவர்கள், அதிகாரத்தில் இருப்பவர்கள்,  கோட்டையில் இருப்பவர்கள், கொடி ஏற்றுக்கொண்டு இருப்பவர்கள் எந்த நேரத்திலும்   நீங்கள் கீழே இறங்கக் கூடிய நிலை வரும்.

அண்ணா திமுக ஆட்சி மீண்டும் வரும். இப்படியே இருந்திருமா ?  சாதம் உசேனையே புரட்டி போட்டது ஜனநாயகம். அது மாதிரி… இந்த ஆட்சி என்றைக்கும் நிலைக்காது, நீடிக்காது. அரசாங்க மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை, மருந்துகள் இல்லை,  மாத்திரைகள் இல்லை.  மருந்துகளையும், மாத்திரைகளையும் வெளிச் சந்தையில் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று NOC  கொடுக்கிறார்கள்.

மருத்துவர்கள் நியமிக்கப்படவில்லை.  அண்ணா திமுக ஆட்சியிலே இந்தியாவிலேயே நம்பர் 1 ஆக இருந்த மக்கள் நல்வாழ்வுத்துறை,  சுகாதாரத்துறை இன்றைக்கு சீர்கெட்டு இருக்கிறது. இந்தியாவிலேயே நம்பர் ஒன் துறையாக இருந்த சுகாதாரத்துறை இன்றைக்கு கடைசி துறையாக தத்தளித்துக் கொண்டிருக்கின்ற துறையாக தான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே மாறியிருக்கிறது. ஏழை எளிய மக்கள் ஒரு லட்சம் பேர் ஒரு நாளைக்கு பயன்பெறக்கூடிய

மருத்துவத்துறை,  இன்றைக்கு மக்களை காக்க வேண்டிய மருத்துவத் துறை தத்தளித்துக் கொண்டிருக்கிறது. சுகாதாரத்துறை  ICUவில் இருக்கின்ற மாதிரி இழுத்துக் கொண்டிருக்கிறது. ஆக இந்த ஆட்சியின் அவலங்கள் நீக்கப்படவேண்டும்,  ஆட்சியின் அவலங்கள் போக்கப்பட வேண்டும்.  நாம் நினைத்தது நடக்க வேண்டும் என்று சொன்னால்,  மீண்டும் அண்ணா திமுக ஆட்சி  வரவேண்டும் என தெரிவித்தார்.

Categories

Tech |