கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தர்ஷன். இவர் அண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அதிர்ஷ்ட தேவதை குறித்து சர்ச்சையான கருத்தை கூறியுள்ளார். இதனால் தர்ஷன் தான் கூறிய சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தர்ஷன் நடித்துள்ள கிராந்தி என்ற திரைப்படம் அடுத்த வருடம் ஜனவரி 26-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டை பகுதியில் நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் தர்ஷன் கலந்து கொண்டு மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது ரசிகர் ஒருவர் தன்னுடைய காலில் அணிந்திருந்த செருப்பை எடுத்து தர்ஷன் மீது வீசினார். இந்த செருப்பு தர்ஷன் தோளில் பட்டு கீழே விழுந்தது. நடிகர் தர்ஷன் மீது மறைந்த நடிகர் ஒருவரின் தீவிர ரசிகர் செருப்பு பேசியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு நடிகர் சிவராஜ்குமார் மற்றும் நடிகை ரம்யா ஆகியோர் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் கன்னட திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.