Categories
சென்னை மாநில செய்திகள்

“கொரோனா அச்சம்” காலவரையற்ற விடுமுறை…… பிரபல கல்லூரி நிறுவனம் அறிவிப்பு….!!

சென்னை ராமச்சந்திரா கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு காலவரையறையின்றி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை போரூரில் அமைந்துள்ள ராமச்சந்திரா கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பில் பயிலும் மாணவர்களுக்கு காலவரையறையின்றி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணமாக நாடு முழுவதும் கொரோனா  நோயின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

இதன் தாக்கம் தமிழகத்திலும் வரலாம் என்ற அச்சத்தின் காரணமாக இந்த காலவரையற்ற விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த விடுமுறை தொடரும் என்றும் கூறப்பட்டு உள்ளது. தற்போது  இமாச்சல பிரதேசத்தில் மார்ச் 31 வரை பள்ளி கல்லூரிகளுக்கு அம்மாநில முதல்வர் ஜெயராம் விடுமுறை அளித்து குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |