உலகம் முழுவதும் கூகுளுக்கு அடுத்தபடியாக மக்கள் அதிக அளவு பயன்படுத்தும் இணைய தளம் என்றால் அது youtube தான். இதில் மக்கள் தங்களுக்கென ஒரு சேனலை உருவாக்கி அதில் பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதன் மூலமாக தினந்தோறும் வருவாய் ஈட்டி வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் யார் வேண்டுமானாலும் youtube சேனல் தொடங்கலாம் என்ற நிலை வந்து விட்டது.
இந்நிலையில் கூகுளின் யூடியூப் நிறுவனம் தற்போது கல்வி துறையிலும் அடி எடுத்து வைக்கிறது. Youtube லேர்னிங் என்ற பெயரில் படிப்புகளை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் பை ஜூஸ், ஆகாஷ் மற்றும் ஆன் அகாடமி போன்ற நிறுவனங்களுக்கு youtube கடும் போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது. காரணம் எல்லா ஆண்ட்ராய்டு போன் கடையிலும் youtube இருப்பதால் மற்ற நிறுவனங்களை விட அதிகமான மக்களை இது சென்றடைய முடியும் என கூறப்படுகிறது.