அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, எவ்வளவு மோசமாக இருக்கு இந்த ஆட்சி ? நம்ம எல்லாம் கொத்தடிமைகளாக வைத்திருக்கின்றது இந்த அரசு. கொத்தடிமைக்கு கொத்தடிமைகளாக வைத்துக்கொண்டு, நம்ம முதலமைச்சர் என்ன பேசுகிறார் ? இன்றைக்கு இந்தியாவிலே சிறந்த ஆட்சியை கொடுக்கிற ஒரே மாநிலம் திமுக ஆளுகின்ற திராவிட மாடல் ஆட்சி என்கிறார்.
பொதுவாகவே மாடல் என்றால் என்ன ? மாடல் என்றால் ஒரு பொருளை விளம்பரப்படுத்துவது.. சேலைக்கு மாடல் வருவார்கள், சோப்புக்கு மாடல் வரும். நடிகைகளை பார்க்கின்றோம். இப்படி மாடல், மாடல் என்று சொல்லி… அசிங்கப் படுத்துகின்றார்கள். என்ன செஞ்சீங்க இந்த ஆட்சியில் ? மின் கட்டணத்தை குறைத்தீங்களா ?
நாங்க ஆட்சியில் இருக்கும் பொழுது மத்திய அரசு மின்சார வாரியம் எங்களை மின் கட்டணத்தை உயர்த்த சொன்ன போது, எங்கள் முதலமைச்சர் எடப்பாடியார் உயர்த்த எண்ணியவுடன் வீட்டுக்கு முன்னாடி நின்று மின்சார கட்டண உயர்வை இன்னைக்கு கேட்டாலே ஷாக் அடிக்குது என்று சொன்னவர்தான் நம்ம முதலமைச்சர்.
இன்னைக்கு இருக்கிற முதலமைச்சர் மின்சாரத்தைத் தொட்டால் தான் ஷாக் அடிக்கும். இன்னைக்கு எடப்பாடி ஆட்சியில் மின்சார வரி உயர்த்தியதை கேட்டாலும் ஷாக் அடிக்கும் என சொன்ன முதல்வரே… ஞாபகமிருக்கிறதா, எல்லாத்தையும் மறந்து விடுகிறீர்களே முதல்வரே என விமர்சித்தார்.