Categories
தேசிய செய்திகள்

ஒரே நேரத்தில் காணாமல் போன சகோதரிகளை!…. சமூகஊடக கணக்கு மூலம் மீட்க பிளான் போட்ட போலீசார்…. பின் நடந்த அதிரடி சம்பவம்….!!!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் மல்புரா போலீஸ் நிலையத்தில் சென்ற டிச..16-ம் தேதி ஒரு புகார் அளிக்கப்பட்டது. அதில், கடந்த 16ம் தேதி காலை 7.30 மணியளவில் பள்ளிக்கு சென்ற இரண்டு சகோதரிகள் வீடு திரும்பவில்லை. இவர்களில் ஒருவர் 10ம் வகுப்பும், மற்றொருவர் 12ம் வகுப்பும் படித்து வந்தனர் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்பின் காவல்துறையினர் பெற்றோரிடம் விசாரித்தபோது மதிப்பெண் குறைவாக எடுத்தது பற்றி சகோதரிகளின் தாய் அவர்களை திட்டியது தெரியவந்தது. இந்நிலையில் காணாமல் போன சகோதரிகளில் ஒருவரின் சமூகஊடக கணக்கு கண்டறியப்பட்டது. அதை வைத்து சகோதரிகளை மீட்க காவல்துறையினர் திட்டமிட்டனர்.

அந்த வகையில் சகோதரிகளுக்கு ஒரு தோழி போல செய்தி அனுப்பி தனது உறவினர் உங்களுக்கு உதவிசெய்ய முன்வந்துள்ளனர் என்று அவர்களிடம் காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். அதன் வாயிலாக அவர்களின் இருப்பிடத்தை டிராக் செய்த காவல்துறையினர், உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் சகோதரிகள் இருப்பதை உறுதிசெய்தனர். அதன்பிறகு உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டுக்கு வந்தால் நிதயுதவி அளிப்பதாக காவல்துறையினர் சகோதரிகளிடம் தெரிவித்தனர். இதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்து மீரட்டுக்கு வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு முன்கூட்டியே காத்திருந்த காவல்துறையினர், சகோதரிகளை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Categories

Tech |