செய்தியாளர்களை சந்தித்து பேசியே விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு பெரும்பாலான இளைஞர்கள் அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். அண்மையில் வெளிவந்துள்ள ஆண்டு திட்ட அறிக்கை இளைஞர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே குரூப் 4 தேர்வை 2023 ஆம் வருடத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் எஸ்சி, எஸ்டி மக்களுக்கான பின்னடைவு பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Categories