மலையாள சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருப்பவர் உல்லாஸ் பந்தளம். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான நிலையில், மம்முட்டியின் தெய்வந்தின்டே ஸ்வந்தம் க்ளீடஸ் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானார். இவர் தன்னுடைய மனைவி ஆஷா மற்றும் மகன்கள் சூரியஜித், இந்திரஜித் ஆகியோருடன் பட்டினம் திட்டா பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் உல்லாஸ் தன்னுடைய மனைவி ஆஷாவை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் உல்லாஸ் வீட்டின் மேல் மாடியில் உள்ள அறையில் ஆஷா தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். உல்லாஸ் மற்றும் அவருடைய மனைவிக்கு இடையே சிறு பிரச்சனை வந்த போது தன்னுடைய மகன்களை அழைத்துக் கொண்டு ஆஷா மேல் மாடியில் உள்ள அறையில் தூங்குவதற்கு சென்றுள்ளார். அதன்பின் இரவு நேரத்தில் திடீரென ஆஷா காணாமல் போகவே உல்லாஸ் மறுநாள் காலை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார்.
ஆனால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் வீட்டில்தான் ஆஷா தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இது குறித்து ஆஷாவின் தந்தை கூறும் போது என்னுடைய மகளுக்கு மனநிலை சரியில்லாத காரணத்தால் அவள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள். என்னுடைய மருமகன் எது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருப்பதால் இது குறித்து நாங்கள் புகார் அளிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார். ஆஷாவின் தந்தையே தன்னுடைய மகள் மனநலம் சரியில்லாதவர் என்று கூறியதால் உல்லாஸ் மீது தவறு இருக்காது என்று கூறப்படுகிறது. மேலும் உல்லாஸுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.