தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த வாரம் புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்தது. தற்போது மழைப்பொழிவு ஓரளவு குறைந்துள்ள நிலையில் தெற்கு வங்க கடலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்நிலையில் தெற்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மெதுவாக நகர்ந்து வருகிறது. இதனால் டிசம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு நாட்களில் இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் டிசம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் கனமழை வெளுத்து வாங்கும் என்றும் மன்னார் வளைகுடாவில் பலத்த சூறாவளி காற்று வீச கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.