நம் நாட்டில் செயல்பட்டு வரக்கூடிய பொதுத்துறை வங்கிகளில் வாராக் கடன் நிலுவைத்தொகையானது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க முடிவு செய்து இருப்பதாக பட்ஜெட் கூட்டத் தொடரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இதன் வாயிலாக பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சி மேம்படும் மற்றும் புது வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் முதற்கட்டமாக 4 பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு முயற்சி செய்வதாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன் வங்கிகளினுடைய பங்கு விலக்கல் நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு அரசு முடிவெடுத்தது.
இந்நிலையில் அந்த வங்கிகளை தனியார்மயமாக்க சம்பந்தப்பட்ட துறைகளின் கருத்துக்களை கேட்டறிந்து, பின் முடிவெடுக்க வேண்டும் என மத்திய நிதித்துறை இணையமைச்சர் தெரிவித்து உள்ளார். அத்துடன் கடந்த காலத்தில் மக்களின் சேமிப்புகளை அபகரித்த 135 நிதி நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.