தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஷால் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் நிலையில், படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருப்பதியில் உள்ள 3 தனியார் கல்லூரிகளில் லத்தி படத்தில் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, லத்தி படத்தின் டிக்கெட் விற்பனையின்போது ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் ஒரு ரூபாய் வீதம் விவசாயிகளின் நலனுக்காக பயன்படுத்தப்படும்.
எனக்கு முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குப்பம் தொகுதி மக்களின் மீது இருக்கும் அன்பின் காரணமாகத்தான் அப்பகுதியில் சில நலத்திட்ட உதவிகளை செய்தேன். எனக்கு ஜெகன்மோகன் ரெட்டியை ரொம்ப பிடிக்கும். ஆனால் சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை. நடிகர் சங்கத்தின் கட்டுமான பணிகள் அடுத்த வருடம் முடிவடையும். அதன் பிறகு நாட்டுப்புற கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என்று கூறினார். மேலும் நடிகர் விஷால் இப்போதைக்கு எனக்கு அரசியல் வரும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார்.