Categories
தேசிய செய்திகள்

மக்களே!… அந்த YouTube சேனல் தகவல்களை நம்பாதீங்க….. மத்திய அரசு எச்சரிக்கை……!!!!!

இந்திய அரசு தன் நாடு மக்களுக்கு பல நலத்திட்டங்களை அறிவித்து அவற்றை செயல்படுத்தி வருகிறது. அவையனைத்தும், பெண்கள், குழந்தைகள், ஓய்வூதியதாரர்கள், விவசாயிகள், தொழில்புரிவோர் என பல்வேறு பிரிவின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. அவ்வாறு மத்திய அரசு வழங்கும் திட்டங்கள் அனைத்தும் அரசின் அதிகாரபூர்வமான விளம்பரங்கள், அறிக்கைகள் மற்றும் அரசின் சமூகவலைதளபக்கங்களில் வெளியிடப்படும்.

ஆனால் இப்போது பல YouTube சேனல்களானது அரசுதிட்டங்கள் மற்றும் பல விஷயங்கள் குறித்து தகவல் வெளியிட்டு வருகின்றனர். அவற்றில், 2.26 மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களை கொண்ட “SarkariUpdate” என்ற யூடியூப் சேனல் மத்திய அரசின் திட்டங்களை குறித்த போலியான தகவல்களை பகிர்வதாக அரசின் உண்மை தகவல் சோதனை மையம் தெரிவித்து உள்ளது. ஆகவே அந்த சேனலிலுள்ள தவறான தகவல்களை மக்கள் நம்பவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |