Categories
அரசியல்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்…. நாக்கில் தித்திக்கும் ஸ்பெஷல் ரெசிபீஸ் லிஸ்ட் இதோ….!!!!

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று தான் கிறிஸ்துமஸ். ஒவ்வொரு வருடமும் இயேசுவின் பிறப்பு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கொண்டாடப்படுவது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். இந்த நாள் 12 நாட்கள் தொடர்ச்சியாக கொண்டாடப்படுகிறது. இந்த தினம் இயேசுவின் பிறந்த தினம் தொடங்கி அடுத்த 12 நாட்கள் வரை நீடிக்கின்றது. இதனை அனைவரும் கொண்டாடி மகிழ்வது வழக்கம்.  அதே சமயம் கிறிஸ்துமஸ் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது கேக்குகள் தான். ஆனால் இந்த பண்டிகை நாளில் இனிப்புகளை தாண்டி வாயில் எச்சில் ஊறவைக்கும் பல உணவுகள் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது. அந்த உணவுகள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

என்ஜிஏ அடோய்பா தோங்பா:

வடகிழக்கு இந்தியாவில் மிகவும் பிரபலமான கிறிஸ்துமஸ் பண்டிகை உணவு இதுதான். மணிப்பூர் மக்கள் கோழிக்கறியை தவிர மீன்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டு செய்யப்படும் இந்த உணவை சமைக்கின்றனர். இதற்கு முதலில் மீன்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு அதனுடன் மிளகு, மசால் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு பவுலில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் சீரகத்தூள் ஆகியவற்றை கலக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், பட்டை, இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து சிறிது நேரம் கழித்து மீன்களை உள்ளே போட்டு வதக்க வேண்டும். பின்னர் ஐந்து நிமிடம் கழித்து மசாலா கலவையை சேர்த்து அதனுடன் உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணி போன்ற காய்கறிகளை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்தால் சுவையான ரெசிபி தயாராகிவிடும். இந்த உணவு அசைவ உணவு போல் இல்லாமல் தனித்துவமான சுவையுடன் இருக்கும்.

குல் குல்ஸ்:

கிறிஸ்துமஸ் பண்டிகையில் செய்யப்படும் பலகார வகைகளில் ஒன்று தான் இது. முட்டை மற்றும் தேங்காய் பால் சேர்த்து செய்யும் போது இதன் சுவை நன்றாக இருக்கும். இதற்கு மைதா, நெய், சீனி, ரவை, கால் அல்லது தண்ணீர் மற்றும் பேக்கிங் பவுடர் தேவைப்படும். மேற்கண்ட அனைத்து பொருட்களையும் தண்ணீர் அல்லது பால் ஊற்றி வடை பதத்திற்கு பிசைந்து கடாயில் எண்ணெய் ஊற்றி காயவைத்து எண்ணெய் காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள பொருட்களை உருண்டையாகப் பிடித்து பொறித்து எடுத்தால் சுவையான ரெசிபி தயாராகிவிடும்.

டக் மொய்லி:

பாரம்பரியமான உணவு வகைகளில் ஒன்றுதான் இது. அசைவ உணவு பிரியர்களுக்கு தனி சுவையை வழங்கும். இதற்கு முதலில் ஒரு கடாயில் வெங்காயம், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி அதன் பிறகு வாத்து கைகளை உள்ளே போட்டு மிளகாய்த்தூள் சேர்த்து கிளறி கொஞ்சம் கறி வெந்தவுடன் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்ட அதனுடன் சுவைக்கு ஏற்ப உப்பு மற்றும் மசாலா பொருட்களை சேர்த்து பரிமாறலாம் .

கரி மீன் மோலி:

கேரளாவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளில் ஒன்று தான் இது. தேங்காய்ப்பால் சேர்த்து இதை செய்யும் போது சுவை நன்றாக இருக்கும். இதனுடன் மசாலா கலந்து செய்யப்படுவதால் மீன் குழம்பிற்கு சுவை அதிகம் தான். இதனை ஆப்பம் போன்றவற்றிற்கு சைடிஷ் ஆக பரிமாறலாம்.

ரோஸ் குக்கீ: தமிழ்நாடு,கேரளா மற்றும் கோவாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது செய்யப்படும் பிரபலமான சிற்றுண்டுகளில் ஒன்று தான் ரோஸ் குக்கி எனப்படும் அச்சு முறுக்கு. இனிப்பு கலந்த சுவையுடன் முறுமுறுப்பாக செய்யப்படுவதால் பிரபலக்கார வகைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

Categories

Tech |