மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் நியாயமான பேச்சுகளை சிலர் ஏற்றுக் கொள்ள மறுப்பார்கள். தொழில் வியாபாரத்தில் உங்கள் உழைப்பிற்கு ஏற்ற வளர்ச்சி உண்டாகும். நிலுவைப்பணம் வசூலாகும். பெண்கள் நகை இரவில் கொடுக்கல், வாங்கல் வேண்டாம். இன்று உங்களின் பலமும், வளமும் கூட கூடிய காலமாக இன்றைய நாள் அமையும். கடந்த கால கடன் பிரச்சினைகள் யாவும் குறையும். குடும்பத்தில் சுபிட்சமும், லக்ஷ்மி கடாட்சமும் ஏற்படும்.
கணவன் மனைவிக்குக்கிடையே சற்று அனுசரித்து நடந்து கொள்வது ரொம்ப நல்லது. புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு அரசு வழியில் கடனுதவிகள் கிடைக்கும். இன்றைய நாள் உங்கள் பொன்னான நாளாகவே அமையும். முடிந்தால் இன்று ஆலயம் சென்று வாருங்கள், மனம் எப்பொழுதும் போலவே நிம்மதியாக இருக்கும். காதலர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் நடந்து கொண்டாலே பிரச்சனைகள் அனைத்துமே சரியாகும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் செய்யுங்கள், உங்களுடைய வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று சிறப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்