சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் கடந்த வருடத்தை விட 7 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து வெளியான அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களின்படி, கடந்த வருடம் ஜனவரி முதல் மே மாதம் வரை மாநிலத்தின் சாலை விபத்துகளில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். 2022 முதல் 5 மாதங்களில் உயிரிழப்பின் எண்ணிக்கை 2,357 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் “உச்ச நீதிமன்றம் ஒவ்வொரு மாதமும் சாலை பாதுகாப்பு நிலையை ஆய்வு செய்யுமாறு தலைமை செயலாளரை சாலை பாதுகாப்பு குழு கேட்டுக் கொண்டுள்ளது.
அந்த வகையில் ஜனவரி மே மாதங்களில் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு உயிரிழப்புகள் அதிகரிப்பதற்கான காரணங்கள் பற்றிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என போக்குவரத்து துறையின் கடிதத்தில்” கூறப்பட்டுள்ளது. கடந்த 2021 -ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிட்டு பார்க்கும்போது இந்த வருடம் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மாநிலத்தில் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. அதேபோல் இந்த வருடம் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 503 ஆக மொத்தம் 456, 403 மற்றும் 500 இறப்புகள் பதிவாகியுள்ளது.
கடந்த 2021 -ஆம் வருடத்தின் இதே காலகட்டத்தில் 472 மற்றும் 516 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டு 49 ஆக இருந்த இறப்புகள் ஏப்ரல் மாதத்தில் 459 ஆகவும், 2021-ல் 302 ஆக இருந்த உயிரிழப்புகள் இந்த வருடம் மே மாதத்தில் 539 ஆகவும் அதிகரித்துள்ளது. சாலை விபத்துகளில் ஏற்படும் இறப்பு விகிதம் 2020 -ல் ஓடிசாவுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது 2021 -இல் 7.24% அதிகரித்துள்ளது. அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 5,081 பேர் உயிரிழந்துள்ளனர். 2020- இல் 4,738 பேர் இறந்துள்ளனர். அதேபோல் 2014 -லிருந்து 2021 வரை இறப்பு எண்ணிக்கையில் நிலையான அதிகரிப்பு உள்ளது. இது அந்தக் காலகட்டத்தில் சுமார் 29% அதிகரித்துள்ளது. இதனையடுத்து 2015- ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 10% உயிரிழப்பைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு சாலைப் பாதுகாப்பு தொடர்பான உச்ச நீதிமன்றக் குழு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.