இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆர் ஆர் ஆர். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி அடைந்தது. ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்த இந்த படம் 2022 ஆம் ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் படமாக அமைந்தது.
இதனைத் தொடர்ந்து கன்னட படமான கேஜிஎப் 2 வசூல் ரீதியாக இரண்டாம் இடத்தை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், புக் மை ஷோ என்ற டிக்கெட் செயலியில் ஆர் ஆர் ஆர் படத்தை காட்டிலும் கேஜிஎஃப் 2 திரைப்படத்திற்கு அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளது.
இதனை அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், முதலிடத்தில் கேஜிஎப் 2, இரண்டாவது இடத்தில் ஆர் ஆர் ஆர், மூன்றாம் இடத்தில் விக்ரம், நான்காம் இடத்தில் பொன்னியின் செல்வன், ஐந்தாம் இடத்தில் பிரம்மாஸ்திரம் போன்ற படங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.