Categories
தேசிய செய்திகள்

நாட்டின் ஜிடிபி வளர்ச்சியில் பங்களிப்பு செய்த யூடியூபர்கள்…. எவ்வளவு கோடி தெரியுமா?…. வெளிவந்த தகவல்…..!!!!

YouTube கடந்த சில தசாப்தங்களில் இளைய தலைமுறையினரிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில் பெரும்பாலான இளைஞர்கள் முழுநேர யூடியூபர்களாக மாறி உள்ளனர். இதன் காரணமாக பல்வேறு தீமைகள் இருந்த நிலையில், நன்மைகள் இருப்பதையும் மறுக்கமுடியாது. இளைஞர்கள் YouTube வாயிலாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருவாயும் ஈட்டுகின்றனர்.

இந்நிலையில் YouTube கன்டென்ட் கிரியேட்டர்கள் நாட்டின் ஜிடிபி வளர்ச்சியில் பங்களிப்பு செய்து இருப்பதாக யூடியூப் நிறுவனமானது தகவல் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக யூடியூபின் ஆசிய -பசுபிக் பிராந்திய இயக்குநர் அஜய் வித்யாசாகர் கூறியதாவது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் YouTube படைப்பாளிகள் தொடர்ந்து பங்களிப்பு செய்து வருகின்றனர்.

அதேபோன்று நாடு முழுவதும் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளையும் YouTube ஏற்படுத்தி வருகிறது. சென்ற 2021ம் வருடத்தில் யூடியூப் கன்டென்ட் கிரியேட்டர்கள் நாட்டின் மொத்த உள் நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் 10,000 கோடி ரூபாய்கும் மேல் பங்களிப்பு செய்து உள்ளனர். முழுநேர வேலைக்கு இணையான 7.5 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை யூடியூப் வழங்கி உள்ளது” என்று அவர் கூறினார்.

Categories

Tech |