முதல்வர் ஸ்டாலினின் சொத்து பட்டியலை வெளியிடுவேன் என்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பூரில் பாஜக சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அண்ணாமலை, நான் கட்டியுள்ள ரபேல் வாட்ச் காண ரசீதை வெளியிட திமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 75 வருடங்களாக எந்த அரசியல்வாதியும் செய்யாததை வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நான் செய்யப் போகிறேன். ரஃபேல் வாச்சுக்கான ரசீது மட்டுமல்லாமல் ஐபிஎஸ் அதிகாரியாக நான் வேலை பார்த்த போது பெற்ற ஊதியம், அதற்கான செலவு விவரங்கள் மற்றும் கிரெடிட் கார்டு பில் விவரங்கள் உட்பட எனது சொந்த விவரங்கள் அனைத்தையும் வெளியிடுவேன். முதல்வர் ஸ்டாலினின் சொத்து பட்டியலையும் வெளியிடுவேன்.
என்னுடைய சொத்து மதிப்பை வெளியிடும் அதே நாளில் முதலமைச்சர் மட்டுமல்லாது அமைச்சர்கள் மற்றும் திமுக எம்எல்ஏக்களின் உண்மையான சொத்து அடங்கிய பட்டியலையும் வெளியிடுவேன். ஸ்டாலின் சொந்தமாக கார் இல்லை என்று தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார். அவர் எந்த கார் வைத்துள்ளார் என்பதையும் நான் கூறுவேன். பூனைக்கு மணிக்கட்டும் நேரம் வந்துவிட்டது. திமுக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் மொத்த சொத்து மதிப்பு 2 லட்சம் கோடி அளவிற்கு உள்ளது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.