தனக்கு நடந்த மோசமான சம்பவம் குறித்து காஜல் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடன இயக்குனராக வலம் வரும் சாண்டி மாஸ்டர் இதற்கு முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் சின்னத்திரை நடிகை காஜல் பசுபதியை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக சென்ற 2012 ஆம் வருடம் இருவரும் விவாகரத்து செய்துவிட்டார்கள்.
இதன் பின்னர் காஜல் பசுபதி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். ஆனால் அங்கிருந்து அவர் சில நாட்களிலேயே வெளியேறி விட்டார். இந்த நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றை அளித்த போது சில தகவல்களை பகிர்ந்து இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, என்னுடைய நெருங்கிய நண்பரிடம் நான் உதவி கேட்டேன்.
அவனுக்கு ஒரு தொலைக்காட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவரை நன்றாக தெரியும். இதனால் அவனிடம் நான் சீரியலில் நடிக்க ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா என கேட்டேன். அவன் சில நாட்கள் கழித்து இரவில் எனக்கு போன் செய்து என்னிடம் தவறான முறையில் ஆபாசமான கேள்விகளை கேட்டான். நண்பனே என்னிடம் இப்படி பேசியது எனக்கு மிகுந்த வருத்தத்தை தந்ததாக தெரிவித்துள்ளார்.