தேனியில் பெண்ணொருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாடெங்கும் கொரோனா வைரஸ் பரவி மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் தமிழ்நாட்டிலும் பரவத் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தேனியில் கூடலூர் பகுதியை சேர்ந்த 48 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நான்கு நாட்களாக மூச்சுத் திணறலால் அவதிப்படும் பெண்ணிற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.