மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால் இன்னும் கட்டுமானம் தொடங்காமல் உள்ளது.இது தொடர்பாக பல தரப்பினரும் தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டு வரும் நிலையில் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இந்நிலையில் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த மருத்துவமனை கட்டுவதற்கு தாமதம் ஏற்பட காரணம் என்ன என வைகோ மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு 2020 ஆம் ஆண்டு நிலங்கள் ஒப்படைக்கப்பட்டது. சுற்றுச்சூழல் கட்டும் பணி 95 சதவீதம் முடிந்துள்ளது. மருத்துவமனைக்கு கூடுதல் திட்ட பணிகள் சேர்க்கப்பட்டதால் கூடுதல் அவகாசம் எடுத்துக் கொண்டதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.