Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே..! புதிய ஆடி கார் வாங்கிய சுதா கொங்காரா…. எம்புட்டு விலை தெரியுமா..?

இயக்குனர் சுதா கொங்காரா வாங்கிய புதிய காரின் விலை தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமா உலகில் முக்கிய இயக்குனராக வலம் வருகின்றார் சுதா கொங்கரா. இவர் தமிழ் சினிமா உலகில் சென்ற 2010 ஆம் வருடம் வெளியான துரோகி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இத்திரைப்படத்தையடுத்து இவர் இயக்கிய இறுதி சுற்று திரைப்படம் இவரை பிரபலமடைய செய்தது. இவர் இயக்கத்தில் வெளியான சூரரை போற்று திரைப்படம் அனைவரின் கவனத்தையும் பெற்று நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படத்திற்கு 5 தேசிய விருதுகளும் கிடைத்தது. இந்த நிலையில் இவர் புதிய ஆடி கார் ஒன்றை வாங்கி இருக்கின்றார். இந்த சந்தோஷமான தருணத்தை ஜிவி பிரகாஷ், சூர்யா, மணிரத்னம், ராஜசேகர் பாண்டியன் உள்ளிட்ட பிரபலங்களுடன் பகிர்ந்து இருக்கின்றார். இவர் வாங்கிய இந்த ஆடி காரின் விலை சுமார் 1.25 கோடியாகும். மேலும் இந்த கார் காற்றை மாசு படுத்தாது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |