Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் விரைவில் வந்தே மெட்ரோ ஹைட்ரஜன் ரயில் சேவை…. மத்திய அரசு சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் 2023-ம் ஆண்டு முடிவடைவதற்குள் வந்தே மெட்ரோ ஹைட்ரஜன் ரயில்கள் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். கடந்த 1950 மற்றும் 60-களில் வடிவமைக்கப்பட்ட ரயில்களுக்கு மாற்றாக அடுத்த வருடம் டிசம்பர் இறுதிக்குள் வந்தே மெட்ரோ ஹைட்ரஜன் ரயில்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. இது குறித்து மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது, முதல்முறையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வந்தே மெட்ரோ ஹைட்ரஜன் ரயில்கள் 2023-ம் ஆண்டு டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும். இந்த ரயில்களின் வடிவமைப்பு தொடர்பான அறிவிப்பு மே அல்லது ஜூன் மாதங்களில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பெரும்பாலான ரயில்கள் டீசல் மற்றும் மின்சாரத்தில் இயங்கி வரும் நிலையில் ஹைட்ரஜன் பயன்பாட்டில் ரயில்கள் இயங்கினால், சுற்றுச்சூழல் மாசுபாடு பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஜெர்மனி நாட்டில் முதல் முறையாக ஹைட்ரஜன் ரயில் சேவை தொடங்கியது. இதனால் ஹைட்ரஜன் ரயில்களை இயக்கிய முதல் நாடு என்ற பெருமையை ஜெர்மனி பிடித்தது. மேலும் இந்த ரயில்கள் மாசுபாட்டை ஏற்படுத்தாததோடு சிறிய அளவு சத்தத்தை மட்டுமே வெளிப்படுத்துகிறது. அதோடு நீராவி மற்றும் ஆவியாக்கப்பட்ட நீரை இந்த ரயில்கள் வெளியிடுகிறது.

Categories

Tech |