செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சரத்குமார், ரம்மி விளையாடுறது அவ்வளவு ஈஸியா போய் எல்லாரும் விளையாட முடியாது. சரத்குமார் நடிச்சதுனால நான் சொல்லல….. ரம்மி விளையாடுவதற்கு இன்டெலிஜென்ஸ் வேணும். எல்லாமே சூதாட்டம் தான… கிரிக்கெட்டே சூதாட்டம் தானே…. வேர்ல்ட் கப் மேட்ச் சூதாட்டம் என சொல்றாங்க இப்போ….
நான் பிரேசில் தோத்தது கஷ்டப்பட்டு மனம் உடைந்து போய் இருந்தேன். எவ்ரி திங் சூதாட்டம் தான். இவன் சொல்லுவான்… இந்த காரை பார்த்துட்டே இரு… பதினாலாம் நம்பர் வண்டி வந்துச்சுன்னா நூறு ரூபா என்றான்… எல்லாருக்கும் அந்த ஆட்டிட்யூட் மாறிடுச்சு. பொருளாதார அடிப்படையில வேகமாக உயர வேண்டும் என்று அனைவரும் நினைக்கிறார்கள் என்று நினைக்கின்றேன்.
இதை சரத்குமார் சொன்னா கேட்டுருவார்களா ? ஓட்டு போடுன்னு சொல்ற.. ஓட்டு போட மாட்டேங்கிறாங்களே… ஓட்டுக்கு பணம் வாங்காத என சொல்லுறேன், வாங்குறாங்களே… இதை எல்லாம் கேட்க மாட்டாங்க… ரம்மி போய் விளையாடு என்று சொன்னால், விளையாடுவாங்க… தோனியும், நானும் சேர்ந்து நடிச்சிருந்தா யாரும் கேட்க மாட்டாங்க என தெரிவித்தார்.