கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட 60 கோடி அறிவித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரபடுத்தி வருகின்றது. இதற்கான அறிவுறுத்தலையும் , உத்தரவையும் தமிழக முதல்வர் பிறப்பித்தார். அதில் , தமிழக மக்கள் தேவையின்றி வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டாம். பொது இடங்களில்கூடுவதை அடுத்த 15 நாட்களுக்கு தவிர்க்க வேண்டும். அனைத்து மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை. வீட்டுக்குள் நுழையும்போது அவ்வப்போது கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும். கூட்டம் நிறைந்த பொது இடங்களுக்கு வயதானவர்கள் , நோய் தொற்று உள்ளவர்கள் , குழந்தைகள் செல்ல வேண்டாம்.கைகளை சுத்தம் செய்யாமல் முகத்தை தொட வேண்டாம் என்று முதல்வர் அறிவுறுத்தினார்.
மேலும் அனைத்து தரப்பு மக்களும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். நோய்க்கான அறிகுறி உள்ளவர்கள் உடனே அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கையை முடுக்கி மாநில பேரிடர் நிதியிலிருந்து ரூ 60 கோடி அறிவித்து உத்தரவிட்ட முதல்வர் , சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை 30 கோடி ஒதுக்கீடு, சென்னை மாநகராட்சிக்கு 4 கோடி , நகராட்சி நிர்வாகத்துக்கு 6 கோடி நிதி ஒதுக்கீடு , ஊரக வளர்ச்சித்துறை 5 கோடி, ஆட்சியாளருக்கு 2.5 கோடி உட்பட 60 கோடி ஒதுக்கீடு என்றும் தெரிவித்துள்ளார்.